116. அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில்
இறைவன் ஐராவதேஸ்வரர்
இறைவி வண்டமர் பூங்குழலி
தீர்த்தம் சூர்ய தீர்த்தம், வாஞ்சியாறு
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கோட்டாறு, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருக்கொட்டாரம்' என்று அழைக்கப்படுகிறது. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமான திருநள்ளாறு தலத்திலிருந்து இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. காரைக்கால் மற்றும் பேரளத்தில் இருந்து குறைவான பேருந்து வசதி உள்ளது.
தலச்சிறப்பு

Tirukottaru Gopuramஒருசமயம் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான தேவலோகத்து ஐராவதம் யானை இத்தலத்துக்கு வந்து தனது கொம்பினால் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி வழிபட்டு சாப விமோசனம் அடைந்தது. கொம்பினால் கோடு போட்டதால் கோட்டாறு (கோடு + ஆறு) என்று அழைக்கப்பட்டது. சற்று தொலையில் வாஞ்சியாறு என்ற ஒரு ஆறு உள்ளது.

இத்தலத்து மூலவர் 'ஐராவதேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'வண்டமர் பூங்குழலம்மை' என்னும் திருநாமத்துடன் சற்று பெரிய அளவில் காட்சி தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், நாகராஜன், சுந்தரர், பரவை நாச்சியார், சம்பந்தர், கைலாசநாதர், திருநாவுக்கரசர், அகத்தீஸ்வரர், சுபக மகரிஷி, வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உள்ளன. கொடி மரம் அருகில் குமார புஷ்பவனேஸ்வரர் சன்னதி உள்ளது.

Tirukottaru Subhaha Rishiசுபக மகரிஷி நாள்தோறும் வந்து சுவாமியை தரிசித்து வருபவர். ஒருநாள் அவர் வருவதற்குள் நடை சாத்தப்பட்டதால் தேனீ வடிவெடுத்து உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அன்று முதல் அவர் அங்கேயே தங்கி விட்டார். அதனால் இன்றளவும் கருவறையில் தேனீ கூடு ஒன்று உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இதிலிருந்து தேனை எடுத்து மூலவருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com